உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வாய்ப்பில்லை, மாறாக பெண்ணிய ஆர்வலர்கள் மட்டுமே சபரிமலை செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வாய்ப்பில்லை, மாறாக பெண்ணிய ஆர்வலர்கள் மட்டுமே சபரிமலை செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத் தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்துள்ளார். 
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்று காலம்காலமாக தடை இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து பெண்ணிய ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அளித்த தீர்ப்பில் ஆண், பெண் சமத்துவம் காக்கப்பட வேண்டும், ஆதலால், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் எனத் தீர்ப்பளித்தது. 
இந்த தீர்ப்பு பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத் தலைவர் பத்மகுமார் கூறுகையி்ல், அரசமைப்புச் சட்டம், சமத்தும், அடிப்படை உரிமை, பாலின சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதற்கு முன்னதாக மலைப்பகுதியில் உள்ள அந்த கோயிலின் அமைப்பு, தனித்துவமான பூகோள அமைப்பு அங்கு வரும் பயணிகளுக்குவரும் சிரமங்களையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு மகரவிளக்கு பூஜையைக் காண்பதற்காக 5.5 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். கூட்டம்கட்டுக்கடங்காமல் 17 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலிலும், கரடுமுரடான பாதைகளிலும் பயணித்து பெண்களால் ஐயப்பனை தரிசிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

சபரிமலையின் பாரம்பரியம், அங்கு கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள், ஆகியவற்றை மதிக்கும் பெண்கள், உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது என்பதற்காக பெண்மிய பக்தர்கள் மட்டுமே ஐயப்பன் கோயிலுக்கு செல்வார்கள். தற்போதைய நிலையில், பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது சவாலான விஷயம். ஆதலால், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் நக்கில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இன்னும் 100 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
