இந்திய விமானி அபிநந்தனின் மனைவியின் பெயரில், ‘அரசியல்வாதிகளே  அபிநந்தன் விவகாரத்தில் கொஞ்சம் அமைதியாக இருங்கள்’என்று  அரசியல்வாதிகளுக்கு எதிராகப் பேசி வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என்ற தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

 பெண் ஒருவர் செல்பி வீடியோ எடுத்து... ’ராணுவ வீரர் அபிநந்தனின் விவகாரத்தை அரசியல் ஆக்காதீர்கள். அதே போல் ராணுவ வீரர்களின்  மரணத்தையும்  யாரும் அரசியல் ஆக்காதீர்கள். அவர்களின் தியாகம் உன்னதமானது. நீங்கள் அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. இப்பொழுது நீங்கள் அரசியல் செய்ய தேவையில்லை குறிப்பாக பா.ஜ.,வினர் அரசியல் செய்யாமல் அமைதியாக இருக்கவும்’  என ஆங்கிலத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. 

இந்த வீடியோவின் அவர் தான் ஒரு ராணுவ வீரரின் மனைவி என தன்னை கூறி தான் இந்த உரையை துவங்குகிறார். இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பவர் அபிநந்தனின் மனைவி என சிலர் போலியாக தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சுமார் 2.4 லட்சம் பார்வைகளையும் , 14 ஆயிரம் ஷேர்களையும் பெற்றுள்ளது. 

அபிநந்தனின் உண்மையான மனைவியின் பெயர் தன்வி மார்வஹா இவர் இந்திய விமானப்படையில் பைலட்டாக இருந்தவர் தான். இந்த வீடியோவில் உள்ள பெண்ணிற்கும் அபிநந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது சிலரின் போலியான தகவலால் இந்த வீடியோ  பரப்பபடுகிறது. இந்த வீடியோ போலியான வீடியோ என பா.ஜ.,வும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.