கருப்பு பணம் ,கள்ள நோட்டுகளை ஒழிக்கவே செல்லாத அறிவிப்பு என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் கருப்பு பணம் பல்வேறு வகைகளில் வெள்ளியாக மாற்றப்பட்டது தெரியவந்தது. 

பல முக்கிய பிரமுகர்கள் , ஐஏஎஸ் அதிகரிகள் கோடிக்கணக்கான ரூபாய் புதிய கரன்சிகளை கருப்புப்பணமாக பதுக்கி வைத்து சிக்கியுள்ளனர். கள்ளநோட்டுகள் மிக மிக சிரிய எண்ணைக்கையே என முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் முதல் பல்வேறு தர்ப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

அதை நிருபிக்கும் வகையில் இதுவரை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 9 லட்சம் கோடி ரூபாய் அளவு தொகையில் வெறும் ரூ 9 கோடியே 63 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்களிடம் இருந்து சுமார் 9 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாக பெற்ற பணத்தில் ரூ.9,63,56,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில், 1000 ரூபாய் நோட்டுகள் 53,046ம், 500 ரூபாய் நோட்டுகள் 86,621ம் வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 63 லட்சத்து 56 ஆயிரம் ஆகும். என தெரிவித்துள்ளது.