Asianet News TamilAsianet News Tamil

நீடிக்கப்படும் ஊரடங்கு..? மே-3ம் தேதிக்கு பிறகு நடக்கப்போவது என்ன..? மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்..!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சர்கள் குழு ஆலசோனையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Extended curfew ..? What's going to happen after May 3?
Author
India, First Published Apr 21, 2020, 1:03 PM IST

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சர்கள் குழு ஆலசோனையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே.3ம் தேதிக்கும் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து காணப்படும் பகுதிகளில் மட்டும் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே.3ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்றாலும், சமூக விலகல்களை கடைபிடிப்பது, முகக்கவசங்கள் அணிவது போன்ற கட்டுபாடுகள் மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிகிறது. Extended curfew ..? What's going to happen after May 3?

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சர்கள் குழு ஆலசோனையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே.3ம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த தளர்வுகள் பச்சை மண்டலங்களுக்கு மட்டும் இருக்கும் என்று தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடை உத்தரவு நீடிக்கும் என்று தெரிகிறது. Extended curfew ..? What's going to happen after May 3?

உள் மாவட்டங்களுக்குள் அல்லது நகரங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மக்கள் முகக்கவசம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அலுவலகங்களும் அதே விதிமுறைகளுடன், கட்டுபாடுகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. Extended curfew ..? What's going to happen after May 3?

திருமணம், மதக்கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதற்கு வாய்ப்புள்ள கூட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட வாய்ப்புகள் இல்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மே.15ம் தேதிக்கு பின்னர் தான் கட்டுபாடுகள் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18,601ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 590ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1,336 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளாத என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios