Exclusive report on Prime Minister Modis cleam India project failed

பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ‘ஸ்வச் பாரத்’ எனச் சொல்லப்படும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

ஆனால், இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களை நாட்டில் உள்ள 50 சதவீத வார்டுகள் இன்னும் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தோல்வியா?

இதன் மூலம், தூய்மை இந்தியா திட்டம் தோல்வியை நோக்கி செல்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

82 ஆயிரம் வார்டு

தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக வீட்டுக்கு வீட்டு நேரடியாகச் சென்று கழிவுகளை பெற வேண்டும் என்ற திட்டம் இன்னும் முழுயாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. நாட்டில் உள்ள 82 ஆயிரத்து 725 வார்டுகளில், 44 ஆயிரத்து 650வார்டுகளில் மட்டுமே வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2019, இலக்கு

நாடுமுழுவதும் சுத்தமாக வைத்து இருக்கும் நோக்கில் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். 2019ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதிக்குள் இந்த திட்டத்தை வெற்றியாக்க முடிவு செய்யப்பட்டது.

தூய்ைம இந்தியா திட்டம்

இந்த திட்டத்தில் வீடுகளுக்கு ஒரு கழிவறை, பொதுக்கழிவறை, சமூக கழிவறை, திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை வீட்டுக்கே வந்து உள்ளாட்சி நிர்வாகம் பெற்றுச்செல்லுதல் போன்றவை முக்கிய அம்சங்களாகும்.

உ.பி.
ஆனால், இந்த திட்டம் பல மாநிலங்களில் இன்னும் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பாஜனதா கட்சி ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் 11 ஆயிரத்து 255 வார்டுகள் இருக்கின்றன, அதில் 4 ஆயிரத்து 688 வார்டுகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரியானா

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயிரத்து 475 வார்டுகளில், 412 வார்டுகளில் மட்டுமே தூய்மை இந்திய திட்டம் செய்யப்பட்டு வருகிறது. 
நிதிஷ்குமார் முதல்வராக இருக்கும் பீகார் மாநிலத்தில் 3,377 வார்டுகளில், 2,588 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம்

தமிழகத்தில் 12 ஆயிரத்து 814 வார்டுகளில் 9,482 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் 2900 வார்டுகளில் 1,360 வார்டுகளில் செயல்பட்டு வருகிறது.

பாதிக்கு மேல்
நாட்டில் உள்ள வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டம் இன்னும் தீவிரமாகச் செயல்படுத்தப்படவில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

காரணம் என்ன?

அதற்கு முக்கியகாரணமாக, உள்ளாட்சிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை, வாகனப்பற்றாக்குறை, கருவிகள் இல்லாதது, பராமரிப்பு செய்ய கருவிகள் இல்லாதது, திடக்கழிவு ேமலாண்மை இல்லாதது எனத் தெரியவந்துள்ளது.

கடிதம்

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தை துரிதமாவும், செம்மையாகவும் செயல்படுத்த மத்திய நகர்புற விவகாரத்துறை அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், “ தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது அவசியம். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல் தடையாக இருக்கும்கருவிகள், ஆட்கள் பற்றாக்குறையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையை செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். கிராமங்களில் அடிமட்ட அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து, வீடுகளில் நேரடியாக குப்பைகளை சேகரிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.