ஜனாதிபதி பதவியில் 5 ஆண்டுகள் காலம் இருந்த பிரணாப் முகர்ஜி, மாநில அரசுகளின் 18 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மசோதாக்கள், மத்திய அரசின் சட்டத்துடன் ஒன்றோடு ஒன்று மோதலாக இருப்பதால், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதேபோல, புதிதாக ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ராம நாத் கோவிந்த் முன்இப்போது வரை எந்தவிதமான கருணை மனுவும் நிலுவையில் இல்லை. பிரணாப் முகர்ஜி, தனது பதவிக்காலத்தில்  ஏறக்குறைய 30 கருணை மனுக்களைநிராகரித்துள்ளார். அதில் தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கிய யாகூப் ேமமன், அஜ்மல் கசாப், அப்சல் குரு உள்ளிட்டோர் அடங்கும்.

மேலும, மாநில அரசுகளின் 15 மசோதாக்கள் ஒப்புதலுக்கு வந்தபோது, அதில் மாற்றங்கள் செய்யுங்கள் என ஜனாதிபதி மாளிகையில் இருந்து அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 111 பிரிவின்கீழ் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு வரும் மாநிலஅரசின் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதலும் அளிக்க முடியும், அல்லது நிறுத்த வைக்க முடியும் அல்லது நிதிமசோதாவாக இல்லாத பட்சத்தில் திருத்தம் செய்யுங்கள் என்று திருப்பி அனுப்பி வைக்க முடியும்.

2015ம் ஆண்டு மணிப்பூர் மக்களை பாதுகாக்கும் மசோதா,  சிக்கிம் மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் மசோதா, டெல்லி சட்டத்திருத்த மசோதா, டெல்லி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் மசோதா, சேவையை சரியான நேரத்தை அளிக்கும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை பிரணாப் நிராகரித்துள்ளார்.

மேலும், பீகார் மாநிலத்தில் இருந்து கரும்பு சப்ளை மற்றும் கொள்முதல் சட்டத்திருத்த மசோதாவுக்கு அந்த மாநிலத்தில் ஆளுநராக இருந்த ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ஆனால், இதை பிரணாப் நிராகரித்தார். இதுபோல், 18 மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களின் 6 மசோதாக்களும் அடங்கும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.