பெண்கள் கழிவறைக்கு செல்ல முயன்ற முன்னாள் எம்.பி.யின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிண் பாண்டே. இவர் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றின் முன்பு துப்பாக்கி முனையில் ஒரு பெண்ணை மிரட்டிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் பெண்ணிடம் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு ஆஷிஷ் பாண்டே கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஆஷிஷ் பாண்டேவின் பெண் நண்பரும், பாதுகாப்பு வீரரும் அவரை அமைதிப்படுத்த முயலுகின்றனர்.ஆஷிஷ் பாண்டே, அந்த பெண்ணுடன் எதற்காக வாக்குவாதம் ஏற்பட்டதென்றால், பெண்கள் கழிவறைக்குள் செல்ல ஆஷிஷ் பாண்டே முயன்றபோது, அதனை தடுத்ததாகவும் அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதன் பின்னர் ஓட்டல் ஊழியர்களால் பாண்டே இழுத்துச் செல்லப்படுகிறார். அவர்களுக்குள் அவர் மிரட்டல் விடுவிப்பதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. கடந்த 14 ஆம் தேத அன்று விருந்து ஒன்றில் இந்த சம்பவ நடந்ததாக தெரிகறது. இந்த வீடியோல சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து டெல்லி போலீசார் ஆஷிஷ் பாண்டே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.