ஆர்எஸ்எஸ், பாஜக தூண்டிவிட்ட வெறுப்புணர்வுக்கு ஒவ்வொரு இ்ந்தியரும் விலைகொடுக்கிறார்கள்: ராகுல் காந்தி ஆவேசம்
ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் சேர்ந்து நாட்டில் தூண்டிவிட்ட வெறுப்புணர்வுக்கு ஒவ்வொரு இந்தியரும் தற்போது விலை கொடுத்து வருகிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் சேர்ந்து நாட்டில் தூண்டிவிட்ட வெறுப்புணர்வுக்கு ஒவ்வொரு இந்தியரும் தற்போது விலை கொடுத்து வருகிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ஷேர் செய்து இந்த பாஜகவைச் சாடியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், வெறுப்புணர்வு அதிகரிப்பு, ஆவேசப்போக்கு ஆகியவை அதிகரித்துள்ளன என சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்களுக்குப்பின் இந்த ட்விட்டை ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.
நம்மிடையே ஒரு வைரஸ் பரவுகிறது என்ற தலைப்பில் சோனியா காந்தி கட்டுரை எழுதியுள்ளார். அதில் நாட்டில் மதரீதியான வன்முறைகள் அதிகரித்து வரும்போது அதுகுறித்துக் கண்டிக்காமல் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது குறித்து சோனியா காந்தி கண்டித்துள்ளார். அந்தக் கட்டுரையில் சோனியா காந்தி கூறுகையில் “ இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி ஒப்புக்கொள்வதுகுறித்து அதிகம் பேசப்படுகிறது.
ஆனால், கடினமான உண்மை என்னவென்றால், மத்திய அரசின் கீழ் என்ன நடக்கிறதென்றால் பலநூறு ஆண்டுகளாக நம் சமூகம் வளர்த்த வளப்படுத்திய நமது பன்முகத்தன்மையை நம்மைப் பிளவுபடுத்தவும், மோசமாக்கவும், தவறுகளை வலுப்படுத்தவும் கையாளப்படுகின்றன.
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், வெறுப்புப்பேச்சுகள், ஆகியவற்றைக் குறைக்கவும், தடுக்கவும் பிரதமர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் சேர்ந்து நாட்டில் தூண்டிவிட்ட வெறுப்புணர்வுக்கு ஒவ்வொரு இந்தியரும் தற்போது விலை கொடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.