Eswaran should give good impression to Modi
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 36 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் யாகம் வளர்க்கும் வகையில் நடத்தப்பட்டது. ஈஸ்வரனை வேண்டி மோடிக்கு நல்ல எண்ணம் கொடு என்று இந்த யாகம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் கூறினர்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பள்ளியும் நல்ல எண்ணம் வேண்டியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டியும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடுத்து செயல்பட வைக்க வேண்டும் என்று ஈஸ்வரனை வேண்டி யாகம் செய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
