Asianet News TamilAsianet News Tamil

சிறைதண்டனையில் இருந்து தப்பித்த அனில் அம்பானி... 2-வது முறையாக உதவிய அண்ணன்...!

எரிக்சன் நிறுவனத்துக்கு பாக்கி வழங்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில் ரூ. 458,77 கோடி பாக்கியை முகேஷ் அம்பானி உதவியுடன் அனில் அம்பானி செலுத்தியுள்ளார். 

Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani
Author
Delhi, First Published Mar 19, 2019, 10:22 AM IST

எரிக்சன் நிறுவனத்துக்கு பாக்கி வழங்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில் ரூ. 458,77 கோடி பாக்கியை முகேஷ் அம்பானி உதவியுடன் அனில் அம்பானி செலுத்தியுள்ளார். 

அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் செயல்பட்டது. நஷ்டம் ஆனதால் ரூ.45,000 கோடி கடன் சுமை ஏற்பட்டது. தொலைத்தொடர்பு துறைக்கு அலை வரிசை கட்டணம் ரூ.2,900 கோடி, எரிக்சன் நிறுவனத்துக்கும் ரூ.1,600 கோடி பாக்கி இருந்ததால், ஜியோ நிறுவனத்திடமும் விற்க முடியவில்லை. எரிக்சன் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ.550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் சம்மதித்தது. Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani

ஆனால் நிலுவை தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை. இதனால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை 4 வாரம் முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் டெலிகாம் தலைவர் சதீஷ் சேத், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் தலைவர் சாயா விராணி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani

அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. இன்னும் 4 வாரத்துக்குள் மீதி பாக்கி தொகையை எரிக்சனுக்கு தராவிட்டால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். நீதிபதி விதித்த 4 வார கெடு இன்று முடிகிறது. அத்துடன் நீதிமன்ற அவமதிப்பிற்காக 3 குற்றவாளிகளுக்கும் 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani

இந்நிலையில் கெடு தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, நேற்று தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையாக ரூ.458,77 கோடியை அனில் அம்பானி செலுத்தினார் என எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உரிய நேரத்தில் நிலுவை தொகையை செலுத்த உதவிய சகோதரர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானிக்கு அனில் அம்பானி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். முகேஷ் அம்பானி, அனில் அம்பானியை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவது இது 2-வது முறையாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios