engineering will access in distance education ordered supreme court
தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்றம், கணிப்பொறி அறிவியல் படிப்பை கல்லூரி சென்று படித்தவர்களும், தொலைவழிக் கல்வியில் படித்தவர்களையும் சமமாக கருத முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், தொலைதூரக் கல்வியில் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளை கற்பிக்க கல்விநிறுவனங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப கல்விகளை படிக்கலாம் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
