காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்ற விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் டெல்லியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்துவருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரைக்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரப்புரை பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார். 

இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது. 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ”பாட்னாவுக்கு செல்லும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் டெல்லிக்கு திரும்பும் நிலை நேரிட்டது. இன்று நடைபெற இருந்த சமஸ்திபூர் (பீகார்), சங்கம்னேர் (மகாராஷ்டிரா), பாலசோர் (ஒடிசா) ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் தாமதமாக நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.