Asianet News TamilAsianet News Tamil

சென்னை உள்பட 16 நகரங்களில் அமலாக்கப் பிரிவு ‘ரெய்டு’ 2,300 போலி நிறுவனங்களைக் கண்டுபிடிக்க தீவிர சோதனை!

Enforcement Directorate raids over 100 locations in 16 states
enforcement directorate-raids-over-100-locations-in-16
Author
First Published Apr 1, 2017, 6:16 PM IST


நாட்டில் பேப்பர் கம்பெனிகள் எனச் சொல்லக்கடிய போலி நிறுவனங்களைக் கண்டுபிடிக்க, சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா ஆமதாபாத் உள்ளிட்ட 16 நகரங்களில், 100 இடங்களில் அமலாக்கப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

போலி நிறுவனங்கள் பேபரில் மட்டும் நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டு,  கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்யும் போலி நிறுவனங்கள்  2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாக பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் கண்டுபிடித்தது. 

இதில் டெல்லி, மும்பையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது தெரியவந்தது.  இது பிரதமர் மோடியின் கருப்பு பண தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்த போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ரெய்டுக்கு திட்டம்

இதையடுத்து, அமலாக்கப்பிரிவினர் போலி நிறுவனங்களின் பட்டியலைத் தயார் செய்து, அதன் இயக்குநர்கள், செயல்படும் இடங்கள், பரிமாற்றம் செய்ய பண விவரங்கள் ஆகியவற்றோடு சோதனையில் ஈடுபட திட்டமிட்டனர்.

16 நகரங்கள்

இதைத்தொடர்ந்து வருவாய் துறையினர், கார்ப்பரேட் விவகாரத்துறை ஆகியவற்றின் துணையுடன் அமலாக்கப்பிரிவினர் நேற்று சோதனையைத் தொடங்கினர். புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, ராஞ்சி, அமதாபாத், புவனேஷ்வர் உள்ளிட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

கருப்புபணம்

இந்த போலி நிறுவனங்கள் ரூபாய் நோட்டு தடையின் போது, கோடிக்கணக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றியதும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டு, கருப்புபணத்தை வெள்ளையாக மாற்றியது  தெரியவந்துள்ளது.

சட்டவிரோத  பரிமாற்றம்

கடந்த 3 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பேப்பர் அளவில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் 22 ஆயிரம் பேர் பயணடைந்து, ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக 15 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருக்கும் நிலையில், 6 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே ரிட்டன்களை முறையாக தாக்கல் செய்து வருகின்றன.

நடவடிக்கை

அமலாக்கப்பிரிவினர்  மேற்கொள்ளும் சோதனைக்கு பின், சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டம், அன்னியசெலாவனி மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெய்டு எங்கே?

சென்னையில் மட்டும் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்புள்ள நிறுவனங்கள், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் சகோதரர் ஆனந்த், மஹாராஷ்டிரா அரசியல் தலைவர் சாஹன் புஜ்பால் ஆகியோருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios