Asianet News TamilAsianet News Tamil

பெங்களூரு நகரில் விரைவில் வருகிறது மின்சார பேருந்துகள்...

electric buses-in-bangalore
Author
First Published Oct 25, 2016, 5:38 AM IST


இந்தியாவிலேயே மின்சார பேருந்துகள் ஓடும் முதல் நகரம் என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக பெங்களூர் நகரில் 150 மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பெங்களூர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மின்சார பேருந்து திட்டத்தின் சோதனை ஓட்டம் கடந்த 2014 ஆம் வருடம் தொடங்கியது. பல ஆண்டுகளாக மின்சார பேருந்துகளுக்கான ஆர்டர்கள் கொடுக்காத நிலையில் தற்போது மின்சார பேருந்துகளை வாங்க பெங்களூர் போக்குவரத்து கழகம் அனுமதி அளித்துள்ளது.

மின்சார பேருந்துகளால், எரிபொருள் சிக்கனம் மட்டுமின்றி, பராமரிப்பு செலவும் குறையும் என்றும், இதன் மூலம் மின்சார பேருந்துகள் ஓடும் முதல் நகரம் என்ற பெருமையையும் பெங்களூர் பெறுகிறது.

2014 ஆம் வருட சோதனை ஓட்டத்தின்போது மின்சார பேருந்தின் விலை 2.9 கோடி ரூபாயக இருந்ததாகவும், ஆனால் டீசலில் ஓடக்வடிய ஏ.சி. பேருந்தின் விலை 90 லட்சமாகும். ஆனால் மின்சார பேருந்தில் ஒரு கிலோ மீட்டருக்கு 7 ரூபாயும், டீசலில் 18 ரூபாயும் செலவாகிறது.

தற்போது உள்நாட்டிலேயே மின்சார பேருந்து தயாரிக்கப்படுவதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும், பெங்களூர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அரசு நிதியுதவியை எதிர்பார்த்து வருவதாகவும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

ஒரு ஆண்டுக்கு மின்சார பேருந்தை பயன்படுத்துவதால், 25 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியுமாம்...!

Follow Us:
Download App:
  • android
  • ios