தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.  சட்டமன்ற சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே. தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள். இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, 20 தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறும்போது, தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் தயார் என்றும் தெரிவித்திருந்தார். 

தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார். 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இதனை தெரிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினால் தேர்தல் நடத்த முடியாது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.