Asianet News TamilAsianet News Tamil

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது...!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஓட்டுரிமையை மறுக்க வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ள யோசனை நூதனமாக உள்ளது.

election voting rights more than 2 kids
Author
Haridwar, First Published Nov 5, 2018, 9:58 AM IST

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஓட்டுரிமையை மறுக்க வேண்டும் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ள யோசனை நூதனமாக உள்ளது. 

ஹரித்வாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் யோகா குரு ராம்தேவ் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றார். கோடிக்கணக்கான மக்கள் தவறானவர்களாக இருப்பதை விட ஒரே ஒரு நல்ல ஆத்மா சக்தி வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று ராம்தேவ் கூறினார்.

 election voting rights more than 2 kids

பிரம்மச்சரியம் மூலம் தூய்மையான ஆத்மா உருவாவதாக ராம்தேவ் தெரிவித்தார். எனவே பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு அரசியலாக்கப்படுவதாக ராம்தேவ் கூறினார்.

election voting rights more than 2 kids

அரசியல் காரணங்களுக்காக மக்கள் தொகையை குறிப்பிட்ட சிலர் பெருக்குவதாக பேச்சுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு வாக்குரிமையை மறுக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறினார். வாக்குரிமை இல்லை என்று தெரிந்தால் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றம் ராம்தேவ் விளக்கினார். தொடர்ந்த பேசிய ராம்தேவ், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றார். election voting rights more than 2 kids

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கூடாது? என்றால் பிறகு என்ன கோவிலை கட்டுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  மேலும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் ராம்தேவ் வலியுறுத்தினார். யோகா குருவாக இருந்து கொண்டு சர்சைக்குரிய வகையில் ராம்தேவ் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios