வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இந்தியா முழுக்க அரசியல் கட்சியினர் கட்சி தலைவர்களும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் மும்முரமாக உள்ளனர்

தற்போது ஓரளவிற்கு யார் யாருடன் கூட்டணி வைக்க உள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியே வந்து, தேர்தல் நெருங்கி வந்தாலும் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் வார இறுதி அல்லது அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக  ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தை சூடு பிடுக்க செய்து வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் பிரச்சாரம். இதில் ஆதரவு கூட்டணி கட்சிகள், பிரச்சார கூட்டத்திலும், கட்சி கூட்டத்திலும் எதிர் கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றன.

இன்னொரு பக்கம் "வேண்டும் மோடி மீண்டும் மோடி" என பலத்த குரல் மக்கள் மத்தியில் எழ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அடுத்த வார இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா,ஒடிசா,சிக்கிம் அருணாச்சலபிரதேச மாநிலங்களுக்கும் தேர்தல தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்