கோவா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
கோவா சட்டசபை தேர்தலில், அந்த மாநில ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது சிம்பல் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, யார் 2 ஆயிரம் ரூபாய் தந்தாலும் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பாரதீய ஜனதா வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள் என்று கூறியதாக சர்ச்சை எழுந்தது.

பாரிக்கரின் இத்தகைய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மனோகர் பாரிக்கரின் பேச்சு சி.டி.யை 3 உறுப்பினர் குழு மீண்டும் மொழி பெயர்த்துள்ளதாகவும் பேச்சு திரிக்கப்படவில்லை, சரியாகவே உள்ளது என கூறி இப்போது புதிதாக மீண்டும் ஒரு நோட்டீசை மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது. இதற்கான விளக்கத்தை அவர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
