குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்படாதது ஏன் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்படாதது ஏன் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல் குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலமும் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்த விபரங்களை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி
அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12 ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் 12 ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அக்டோபர் 17 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாள். மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்பும வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: நவம்பர் 12ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
இதுக்குறித்து தேர்தல் ஆணையரிடம் கேட்டபோது, இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு இடையே 40 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி 30 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் மட்டுமே அறிவிப்பை வெளியிட முடியும். இதனை தவிர்த்து பல காரணங்கள் இருக்கின்றன. வானிலை ஒரு மிக முக்கியமான காரணம். பனிப்பொழிவு நடைபெறுவதற்கு முன்னதாக இமாச்சல பிரதேசத்தில் தேர்தலை நடத்தி முடித்துவிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரை கலந்து ஆலோசித்த பின்னர்தான், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. குஜராத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட மாட்டாது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
