Asianet News TamilAsianet News Tamil

நவம்பர் 12ம் தேதி இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Election Dates For Himachal Pradesh Announced
Author
First Published Oct 14, 2022, 5:18 PM IST

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி 8 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Election Dates For Himachal Pradesh Announced

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

அக்டோபர் மாதம் 17 -ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் குறித்த அரசு ஆணை வெளியிடப்படுகிறது. இதை அடுத்து தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அக்டோபர் 25ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம்.  அக்டோபர் 27 -ஆம் தேதி விருப்பமுள்ளவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 -ஆம் தேதி எண்ணப்பட்டு ஆண்ட்ரே இறுதி முடிவுகள்  அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios