election commission announcing date for himachal pradesh polls

இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஹிமாசலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

குஜராத்தில் டிசம்பர் 18 ஆம் தேதிக்கு முன்னர் வாக்குப் பதிவு நடத்தப் படும். பின்னர், குஜராத் மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளும் சேர்த்து எண்ணப்பட்டு, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் 

இமாசலப் பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு பின்னர் வெளியாகும். 

இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்... 
இதனை இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார் தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி.