முதல் கட்ட தேர்தல் நடைபெறும் கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை தொடங்குகிறது. 403 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. மணிப்பூரில் மார்ச் 4, 8ஆம் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வருகிற 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 117 தொகுதிகள் அடங்கிய பஞ்சாப் மாநிலத்திலும் 40 தொகுதிகள் கொண்ட கோவாவிலும் வருகிற 4ஆம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப் பதிவு நடக்கிறது.
இதையொட்டி இரு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக இறுதி கட்ட பிரசாரம் அனல்பறக்கும் வகையில் இருந்தது.
தேர்தல் விதிப்படி, ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரச்சாரம் முடிவடைய வேண்டும் என்பதால் நேற்று மாலை 5 மணியுடன் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது. 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பாேடப்பட்டுள்ளன.
