கத்தார்.. மரண தண்டனை விதிக்கப்பட்ட "இந்திய கடற்படை அதிகாரிகள்" - குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர்!
New Delhi : கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
பல்வேரு காரணங்களுக்காக கடந்த ஓராண்டாக கத்தார் நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு மரணதண்டனை விதித்தது. இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை இந்த தகவல் ஏற்படுத்திய நிலையில், இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியர்களை விடுவிக்க இந்தியா தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என்று அந்த 8 பேரின் குடும்பத்தை சந்தித்து கூறினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசிய அவர் "கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுவிக்க அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறினார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர்.. இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் !!
ஒரு காலத்தில் பெரிய இந்திய போர்க்கப்பல்களுக்கு தலைமை தாங்கிய செயல்பட்டு வந்த அதிகாரிகள் உட்பட, கத்தாரின் ஆயுதப்படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமான தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் அந்த 8 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் சிலர் மிகவும் உணர்திறன் வாய்ந்த திட்டத்தில் பணிபுரிவதாக ஆதாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக இத்தாலிய தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டெலத் குணாதிசயங்களை கொண்ட மிட்ஜெட் நீர்மூழ்கிக் கப்பல் பணிகளில் அவர்கள் பணியாற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த எட்டு கடற்படை வீரர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், கத்தார் அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் முன்னதாக கூறியிருந்தது. "மரண தண்டனையின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்" என்று அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D