முதலமைச்சர் மீது முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மயூர்பான்ஜ் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார். சுலியபடா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள், முதல்வர் நவீன் பட்நாயக் மீது எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென முதல்வரை நோக்கி, மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முட்டையை வீசினார். ஆனால் அது அவர் மீது விழவில்லை. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குள் முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர்அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
