நடிகை சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா ஸ்ரீரங்காபாட்னா தாலுகாவில் நடைபெற்றது. இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வந்து இருந்தார். அதேபோல் மாண்டியா தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான  சுமலதா வந்திருந்தார். இருவரும் சேர்ந்து அங்கு காவிரி நீரில் பூக்களை தூவி அணையை திறந்தனர். நீருக்கு பூ போடும் போது சுமலதா இடுப்பில் எடியூரப்பா கை வைப்பது போல காட்சிகள் பதிவாகி உள்ளது. 

 

சுமலதா கோபத்தில் எடியூரப்பாவிடம் பேசுவது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கர்நாடகா முழுவதும் இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எடியூராப்பாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.