education about GST

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பட்டயப்படிப்புகளை விரைவில் தொடங்க உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்- 2017 (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. தொடர்பான வரிவிதிப்பு முறைகள், வர்த்தகர்கள், சிறு, குறுந்தொழில் புரிவோர் ரிட்டன் தாக்கல் செய்வதில் பல்வேறு குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஜி.எஸ்.டி. வரி குறித்து தெரிந்து கொள்ளவும், அது தொடர்பான விவரங்களை தெரிந்துள்ள இளைஞர்களுக்கும் வரும் காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்ககூடும்.

இதனால், ஜி.எஸ்.டி. குறித்து தெரிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி. குறித்த பட்டயப் படிப்புகள் விரைவில் அமல்படுத்த இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் யோகேஷ் தியாகி கூறுகையில், “ வணிகவியல் துறையின் கீழ் ஜி.எஸ்.டி. குறித்த பட்டயப்படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அறிவியல் துறையின் கீழ் இணைய குற்றங்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சைபர் சட்டங்கள் குறித்த முதுகலை பட்டயப் படிப்பு வரப்படும் . இந்த பட்டயப் படிப்புகளில் கல்வியாண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்’’ என தெரிவித்துள்ளார்.

தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.