டெல்லி முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு!

கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், அவரை கைது செய்ய தயாராகி வருகிறார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறுகிறார்.

ED Team At Arvind Kejriwal's Residence After HC Denies Him Interim Relief In Liquor Policy Scam Case sgb

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் அளிக்க மறுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த ரெய்டு நடக்கிறது.

இதற்கிடையில், மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மனுவை அவசர வழக்காகக் கருதி நள்ளிரவிலேயே விசாரணை நடத்தவும் கோரியிருப்பதாகத் தெரிகிறது.

தொழிலதிபரை சிப்ஸ் கொடுத்து ஏமாற்றிய ஸ்டெஃப் மிஸ்! ரூ.95 லட்சத்தை அபேஸ் செய்த விர்சுவல் தோழி!

ED Team At Arvind Kejriwal's Residence After HC Denies Him Interim Relief In Liquor Policy Scam Case sgb

கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், அவரை கைது செய்ய தயாராகி வருகிறார்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் சவுரப் பரத்வாஜ் கூறுகிறார்.

“முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடக்கிறது. அவரது வீட்டிற்குள் போலீசார் இருப்பதாலும், யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததாலும் அமலாக்கத்துறையினர் அவரைக் கைது செய்ய தயார் செய்கிறார் என்று தோன்றுகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே சிஆர்பிஎப், ஆர்.ஏ.எப்,. படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், “அமலாக்கத்துறை மற்றும் அவர்களின் எஜமானர்களான பாஜக, நீதிமன்றங்களை மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால் இன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ரெய்டு நடத்த வந்திருக்கமாட்டார்கள்... இது அரசியல் சதி, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யவே அவர்கள் வந்திருக்கிறார்கள்...” என்கிறார்.

தேர்தல் பத்திர வழக்கில் சீரியல் நம்பருடன் முழு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios