Asianet News TamilAsianet News Tamil

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிப்பு – வேட்புமனு தாக்கல், ரிசல்ட் – முழு விவரம்!

Maharashtra, Jharkhand Election 2024 Dates:மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், சரிபார்ப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ECI Announced Maharashtra and Jharkhand Election 2024 Dates and Poll, Result Check all details here rsk
Author
First Published Oct 15, 2024, 4:42 PM IST | Last Updated Oct 15, 2024, 4:46 PM IST

Maharashtra, Jharkhand Election 2024 Dates: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்தது. அதன்படி மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ஆம் தேதியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம அறிவித்துள்ளது. இங்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஹரியானா காங்கிரஸ் தோல்விக்கு ஹூடா தான் காரணம்! அவர் முட்டாள்! குர்னாம் சிங் விமர்சனம்!

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்து வரும் 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வேட்பு மனு தாக்கல் செய்ய இந்த மாதம் 29 ஆம் தேதி கடைசி நாள் என்றும், 30ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வேட்புமனுவை திரும்ப பெற நவம்பர் 4ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநில தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணி 23 ஆம் தேதி தொடங்கி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 25 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தலுக்கு 29ஆம் தேதியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பாதுகாவலனாக நிலைநிறுத்திய முதல்வர் மோகன் யாதவ்!

இரு கட்டங்களுக்கும் வேட்புமனு சரிபார்ப்பு நாளாக 28 மற்றும் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி வரையில் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

 

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த 2 மாநிலங்களும் முறையே மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைகிறது. ஆதலால், இந்த மாநிலத்தில் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த மாநிலத்தில் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios