Asianet News TamilAsianet News Tamil

அந்தமான் நிகோபார் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி; ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிறு இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானது.

Earthquake of magnitude 5.3 hits Andaman and Nicobar Islands
Author
First Published Jul 10, 2023, 9:12 AM IST

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிறு இரவு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.39 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவிக்கிறது.

ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கமாக இருந்தது. இருப்பினும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

அதிகரித்து வரும் பணக்காரக் குடும்பங்கள்... தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ஆய்வில் தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios