Asianet News TamilAsianet News Tamil

ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 11வது முறையாக நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்!! 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் தொடர்ந்து 11வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

earthquake of magnitude 3.4 on the Richter scale hits Katra in Jammu and Kashmir 
Author
First Published Aug 26, 2022, 10:42 AM IST

இன்றும் அதிகாலை கட்ரா என்ற பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 5 கி. மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கும் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த புதன் கிழமை இரவும் தொடர்ந்து இரண்டு முறை நிலடுக்கம் இந்தப் பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2, 4.1 என்ற அளவில் இருந்தது. அப்போது ஏற்பட்ட நிலநடுக்கமும் 5 கி. மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்றும் அதிகாலை அதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios