இன்று சனிக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான பலத்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் இன்று சனிக்கிழமை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் 72 ஆண்டு கால அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கை

இன்று சனிக்கிழமை சரியாக இரவு 9:30 மணி அளவில், ஆப்கானிஸ்தானின் ஹிந்துஷ் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 180 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். 

Scroll to load tweet…

நொய்டா உள்பட டெல்லியின் பல பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வு உணரப்பட்டதாக நொய்டா வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் பயத்தில் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

வரதட்சணையில் பிரிட்ஜ் கொடுக்காததால் கொந்தளிப்பு.. அடித்து கொல்லப்பட்ட 7 மாத கர்பிணி - மாட்டிய சொந்தங்கள்!