each is is same MRP rate - ban for sell different rates in shopping mall s theater
ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், விமானநிலையங்களில் ஒரே பொருளுக்கு, வெவ்வேறு உயர்ந்த பட்ச சில்லரை(எம்.ஆர்.பி.) விலை வைத்து நிறுவனங்கள் விற்க மத்திய அரசு தடை செய்துள்ளது.
மத்திய நுகர்வோர் அமைச்சகம் ‘பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்-2011 சட்டத்தில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின்படி, இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
அதுவரை உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களும் தங்களை இந்த சட்டத்துக்கு தயார்படுத்திக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதன் நோக்கமே நுகர்வோர்கள் பாதுகாக்க பட வேண்டும் என்பதுதான்.
இதற்காக அனைத்து தரப்பினரிடமும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
அதே சமயம், தொழில் செய்வதிலும் எந்த இடையூறு இல்லாதவாறு மாற்றங்களும்ெசய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பேக்கிங் செய்யப்படட உணவு பொருட்களை தனி நபர் ஒருவர் வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு விலையில் விற்பனை செய்யக்கூடாது. சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்கள், விமானநிலையங்களில் ஒரே பொருளுக்கு பல்வேறு விலைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று நுகர்வோர்கள் தரப்பில் புகார்கள் தரப்பட்டதையடுத்து, இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவத்துறையில், உயிர்காக்கும் கருவிகள், அறுவைசிகிச்சையில் நோயாளிகளுக்கு பொருத்தப்படும்ஸ்டென்ட், வால்வு, எலும்புகளில பொருத்தப்படும் கருவிகள், சிரிஞ்ச், அறுவை சிகிச்சை கருவிகள் ஆகியவை விற்பனை செய்யப்படும் போது, அதில் கண்டிப்பாக எம்.ஆர்.பி. விலை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வௌி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவத்துறை சார்பான பொருட்கள், நோயாளிகளுக்கு பொருத்தப்படும் பொருட்களில் எம்.ஆர்.பி. விலை இருப்பதில்லை, மருத்துவமனை தங்களுக்கு ஏற்றவிலை வைத்து நோயாளிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கின்றன.
உண்மையில், வௌிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் நோயாளிகளுக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று வாதிடுவதால் விலையை ஒட்டுவதில்லை.
அதை மருத்துவமனைகள் பெற்றுக்கொண்டு தங்களுக்கு ஏற்றவிலையில் விற்கின்றன. இது தடுக்கப்பட்டு, எம்.ஆர்.பி. விலை ஒட்டப்பட வேண்டும் என்பது, 2018 முதல் கட்டாயமாகிறது.
