கேரளாவில் விடாத மழை.. இறந்த உடலை 3 நாட்கள் வைத்திருந்த சோகம் - கடைசி காலத்தில் இப்படியா.!!
கனமழை காரணமாக கேரளாவில் நடந்த சோகமான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இம்முறை மிகத் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் அதன் பின்னர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மேடு, பள்ளம், மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இதனால் மழை நீர் தேங்கி பல பகுதிகளிலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் இதுவரை எட்டுபேர் உயிர் இழந்து உள்ளனர். தாழ்வான பகுதிகளிலும், அணை,கரையோரப் பகுதிகளிலும் வசிக்கும் 7800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இப்படியா.! இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்
மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் நூற்றுக்கும் அதிகமான முகாம் இல்லங்களும் இதற்கென அமைக்கப்பட்டு உள்ளது. தொடர் மழையின் காரணமாக கேரளத்தில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள அப்பர் குட்டநாடு பகுதியில் உள்ள பெரிங்கரையைச் சேர்ந்த 73 வயதான குஞ்சுமோனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கனமழை காரணமாக எதையும் செய்ய முடியாமல் போனது. அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அவரின் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருந்ததால், உடலை வெளியே கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீர் குறைந்த பின்பு செய்யலாம் என்று பார்த்தால், மழை குறைந்த பாடில்லை. எனவே மழையை பொருட்படுத்தாமல், வீட்டின் அருகே உள்ள சாலையில் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர் உறவினர்கள். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்