டெல்லியில் நடுரோட்டில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்மேற்கு டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள சீத்லா மாதா ரோட்டில் நேற்று குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டு அதில் சத்தமாக சினிமா பாடல்களை ஒலிக்க விட்டபடியே நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டனர்.  

இதனால் போக்குவரத்து கடுமையா பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த சில உணவக உரிமையாளர்கள் வாகனங்களுக்கு வழி விட்டு சாலையைவிட்டு ஓரமாக செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த இளைஞர் நான் யார் தெரியுமா? போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறிவிட்டு நடனம் ஆடினர்.

அந்த இளைஞர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால் அங்கிருந்தவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து அந்த இளைஞரை அப்புறப்படுத்த முயற்சித்தனர். 

ஆனால் அவர் ரோந்து போலீசாரின் பேச்சை கேட்டவில்லை. எல்லை மீறுவதை அறிந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீஸார் விசாரித்ததில் அந்த இளைஞரின் பெயர் தருண் தஹியா என்பதும் அவர் குருகிராமிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள நுஹ் மாவட்டத்தில் தாரு குற்றப்பிரிவு பொறுப்பு இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்ட பின்னர், தருண் தஹியாவையும் அவரது நண்பர்களையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.