மகாராஷ்டிரா எரவாடாவில் BMW கார் ஓட்டுநர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹோட்டல் உரிமையாளர் மனோஜ் அகுஜாவின் மகன் கவுரவ் அகுஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காலை மகாராஷ்டிர மாநிலம் எரவாடாவில் உள்ள ஒரு முக்கிய சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் சிறுநீர் கழித்ததாக BMW கார் ஓட்டுநர் ஒருவரை புனே நகர காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகப் பரவியது. வீடியோவில் பிஎம்டிபிள்யூ காரில் வரும் இளைஞர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு நடுரோட்டிற்கு வந்து சிறுநீர் கழிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த அநாகரிகமான செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரைத் தட்டிக் கேட்பதும், இதனால் ஆத்திரம் அடைந்த இன்னொரு இளைஞர் காரில் ஏறி அமர்ந்து ஆடையை ஆபாசமாக செய்கை செய்துவிட்டு தப்பி செல்வதும் வீடியோவில் காணப்படுகிறது. அந்த இளைஞர் கையில் ஒரு மதுபாட்லையும் வைத்திருந்ததைப் பார்க்க முடிகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்டைய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனால், புனே நகர போலீசார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தினர். புனேயில் ஹோட்டல் நடத்தும் மனோஜ் அகுஜாவின் மகன் கவுரவ் அகுஜா தான் நடுரோட்டில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது.
கவுரவ் அகுஜா தனது நண்பருடன் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் காரில் புனே ஏரவாடா சாஸ்திரிநகர் சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தைச் செய்துள்ளனர். இந்து குறித்து வழக்குப்பதிவு செய்த புனே போலீசார் கவுரவ் அகுஜா மற்றும் அவருடன் வந்த நண்பரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
