15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்பு.. நேரலை..!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டில் குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர் திரவுபதி முர்மு 2,96,626 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர், 2வது பெண் குடியரசுத் தலைவர் மிக குறைந்த வயது குடியரசுத் தலைவர் என்ற பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க;- இனி இரவு நேரத்திலும் தேசிய கொடியைப் பறக்கவிடலாம்.. பழைய உத்தரவை மாற்றி மத்திய அரசு அதிரடி.!
இந்நிலையில், முர்முவின் பதவியேற்பு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடக்கிறது. காலை 10.15 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதற்காக முர்முவும், ராம்நாத் கோவிந்தும் முப்படைகளின் அணிவகுப்புகளை ஏற்றுக்கொண்டனர். பின்னர், முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைதத்தார். அப்போது, குடியரசுத் தலைவர் பதவி என்பது நாட்டு அரசியலமைப்பின் உச்சபட்ச பதவி என்பதால், முர்மு பதவியேற்கும் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்ப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு முர்மு உரையாற்றி வருகிறார்.
இதையும் படிங்க;- குழந்தைகளுக்காக இதை எல்லாம் பாதுகாக்க வேண்டும்... ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை!!
இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.