பெண் போலீஸ் போட்டோவை  நிர்வாணமாக மார்பிங் வெளியிட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சி மெட்ரோ ரயில்வே காவல்நிலையத்தில் எட்டாக பணியாற்றி வருபவர் ரதி. இவரது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக சமூக வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

அவரது புகைப்படம் அவரது நண்பர்களுக்கு வரவே  உடனே அவர் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

பெண் போலிசாரின் புகாரை ஏற்ற எர்ணாகுளம் போலீசார்   தீவிர விசாரணையில்  நெடுமங்காட்டை சேர்ந்த 26 வயதான ஆட்டோ டிரைவர்  சித்திக் சிக்கினார்.

சித்திக்கை விசாரித்தபோது, எப்போதும் பேஸ்புக்கை பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்துள்ளார் சித்திக். பெண்களை மோசமாக சித்தரிக்கும் பேஸ்புக் பக்கங்களையே பார்ப்பதும், அந்த பேஸ்புக் குரூப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

பேஸ்புக்கில் வரும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதில் தலையை மார்பிங் செய்து வெளியிட்டு, பின்னர் அவர்களிடம் அதனை காட்டி பணம் பறிப்பது இவர்களது வழக்கம் என தெரிய வந்துள்ளது. மேலும் 6 பேர் இதில் தொடர்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை  எடுத்து வருகின்றனர்.