காஷ்மீரில் அதிகரிக்கும் போதை ஊசி பயன்பாடு! எச்சரிக்கும் மருத்துவர் அப்துல் மஜீத்
ஜம்மு காஷ்மீரில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாவும் டாக்டர் அப்துல் மஜீத் சொல்கிறார்.
வயதான காஷ்மீரி ஒருவர் போதைக்கு அடிமையான தங்கள் மகனால் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு அதிகமாகிவிட்டதாகக் கூறி, மகனைக் கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் கெஞ்சும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது. அந்த வயதான தந்தையின் முறையீடு காஷ்மீரில் போதை ஊசிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டதற்கு ஒரு அடையாளமாகத் தோன்றுகிறது.
காஷ்மீரில் போதைப்பொருள் பயன்பாடு ஒரு தொற்றுநோயாக மாறியுள்ளது. போதை ஊசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. விலையுயர்ந்த ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் சுமார் பத்து லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளனர், அவர்களில் பலர் போதை ஏற்படுத்தும் பலவித பொருட்களை உட்கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதியும் ஜம்மு காஷ்மீர் எம்.பி.யுமான ஹஸ்னைன் மசூதி எழுப்பிய கேள்விக்கு. மார்ச் 30, 2023 அன்று மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அளித்த பதிலில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
நடுவானில் தள்ளாடி அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்!
1.08 லட்சம் ஆண்களும், 36,000 பெண்களும் கஞ்சா பயன்படுத்துவதாகவும், 5.34 லட்சம் ஆண்கள் மற்றும் 8,000 பெண்கள் ஓபியாய்டு பயன்படுத்துவதாகவும், 1.6 லட்சம் ஆண்கள் மற்றும் 8,000 பெண்கள் பல்வேறு மயக்க மருந்துகளை பயன்படுத்துவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் கோகோயின், ஆம்பெடமைன், ஹாலுசினோஜென் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
காஷ்மீரி முதியவர் தனது மகனைப் பற்றிய அச்சத்தை பகிரங்கமாகச் சொல்லக் காரணம், காஷ்மீரில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான். பேரன் போதைக்கு அடிமையானதால் அவரது பெற்றோருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
மார்ச் 29 அன்று பாரமுல்லாவில் போதைக்கு அடிமையான மகனால் ஒரு பெண் கொல்லப்பட்டார். போதைக்கு அடிமையான ஒருவர் டிசம்பர் 22ஆம் தேதி ஐஷ்முகம் கிராமத்தில் தனது தாயையும் மேலும் இருவரையும் கொன்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் போதைக்கு அடிமையானவர் கெஹ்ரிபாலில் தனது தாயைக் கொன்றார்.
ஆன்லைன் லோனில்... ஜட்டி வரை உருவிட்டான்... பாதிக்கப்பட்ட இளைஞரின் புலம்பல் பாடல்!
"ஹெராயின் ஊசிகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது இன்று பெரிய சவாலாக உள்ளது... இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என SKIMS மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் அப்துல் மஜீத் தெரிவிக்கிறார். ஹெராயின் ஊசியால் போதைக்கு அடிமையானவர்களிடையே ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று அதிகரித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கையாள்வது சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் பொறுப்பாகும் என்றும் ஊடகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், மதத் தலைவர்கள், போதகர்கள் இதைப் பற்றி பேச வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சமூக நலத்துறை, திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சியால் போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்றும் அப்துல் மஜீத் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
போதைப்பொருள் சிகிச்சைக்கு வருபவர்களில் குறைந்தது 40 முதல் 60 சதவீதம் பேர் மனநலப் பிரச்சனைகளைக் கொண்டுள்ளனர் 30 சதவீதம் பேர் ஹெபடைடிஸ் சி அல்லது பி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மஜீத் குறிப்பிடுகிறார். ஸ்ரீநகரில் உள்ள மத்திய சிறையில் போதைக்கு அடிமையான 320 பேரில் 80 பேர் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுக்கும் அண்ணாமலை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேச்சு!
போதைப்பொருளின் அச்சுறுத்தலைக் கையாள்வதில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளது என்று அவர் கூறுகிறார். ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களில் போதைக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது என்று சுட்டிக்காட்டிய மஜீத், காஷ்மீரில் மதுபானம் ஒருபோதும் ஒரு பிரச்சனையாக இருந்தில்லை என்றும் கூறுகிறார்.
ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான அபுல் மன்னன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் 15 வருடங்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி இருந்தார். கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்ற பின், இன்று அவரது வாழ்க்கையே மாறியுள்ளது. "நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போது, ஒரு நண்பர் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருந்தார். அவர் மூலம் நானும் போதைக்கு பழக்கத்துக்கு பலியாகிவிட்டேன்" என்று அந்த இளைஞர் சொல்கிறார். சிகிச்சை முடிந்ததும் மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கையை நடத்தவும், திருமணம் செய்துகொள்ளவும் அபுல் மன்னன் முடிவு செய்துள்ளார்.
கோடையில் வண்ணமயமாக ஜொலிக்கும் செவ்வாய் கிரகம்! நாசா விண்கலம் எடுத்த கண்கவர் புகைப்படங்கள்!