சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் செலுத்தும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், டோல்கேட்டில் இனி பணம் கொடுக்க வேண்டாம். மாற்று ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு, கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. ஆனால், கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை மாற்றுவதற்கு நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில் மத்திய அரசு, ஏராளமான கட்டுப்பாடுகளும், சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு பகுதிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வோர், சுங்கச்சாவடிகளில் பணத்தை மாற்றுவதற்கு கடும் சிரமம் அடைகின்றனர்.
இதையொட்டி பொதுமக்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது. முன்னதாக, சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு வரை கட்டணம் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. வரும் 15ம் தேதி வரை 500 மற்றும் 1000 ரூபாய்களை மாற்றலாம் என அறிவுறுத்தியது.

இதைதொடர்ந்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியில், இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூல் செய்ய, எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் பார்வையிட்டார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டண வசூல் மையங்களில், கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதிப்பு குறைவான ரூபாய் நோட்டுக்களின் பற்றாக்குறையால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஸ்வைப் மெஷின் எனப்படும் நவீன கருவிகள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. இவற்றில் டெபிட்கார்டு, கிரடிட் கார்டு ஆகியவை பணம் செலுத்தமுடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யும் ஊழியர்களுக்கு, ஆன்லைன் மூலம் பணம் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடியில் இடிசி எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தரைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரி விவேக் ஜெய்ஸ்வால் நேரில் பார்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தார்.
இதேபோல, பள்ளிக்கொண்டா, வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
