தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்கூட்டியே கேரளாவில்  பெய்யத் தொடங்கியது. கடந்த மாதம் தொடர்நது பெய்த மழையால் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

இந்நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை மீண்டும் மிரட்டத் தொடங்கியுள்ளது. இந்த முறை மழை சற்று உக்கிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமேனோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இடைவிடாது பெய்து வருவதால், தங்கள் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் அமெரிக்க பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.