donkey selling at the price of 10 lakhs
இனிமே யாரையும் கழுதைனு மறந்துகூட திட்டிவிடக்கூடாது, ஏனென்றால், சண்டிகரில் வளர்க்கப்படும் இந்த பிரத்யேக கழுதை ரூ.10 லட்சத்துக்கு விலைபோகுதாம். மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறதாம். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா..
நாட்டில் உள்ள மற்ற கழுதைகளைக் காட்டிலும், 7 இஞ்ச் உயரம் அதிகமாக இருப்பதால், பார்ப்பதற்கு சிறிய குதிரைபோல் இருக்கிறது.
இது குறித்து இந்த கழுதைகளை வளர்க்கும் அரியானாவின் சோனேபேட் நகரைச் சேர்ந்த ராஜ் சிங் கூறியதாவது-
என்னுடைய கழுதைகள் சாதாரண கழுதை போல் அல்ல. மற்ற கழுதைகளைவிட 7 இஞ்ச் உயரமானது என்பதால், சிறப்பு வாய்ந்தது. இதற்கு திப்பு என பெயர் வைத்து இருக்கிறேன். வழக்கமாக கழுதைகள் விலைக்கு விற்றால், ஒரு லட்சம் வரை மட்டுேம போகும், ஆனால், என் கழுதையை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை விலை கேட்கிறார்கள்.
இந்த கழுதைகள் மூலம், பல புதிய கலப்பினங்களை உருவாக்கி வருகிறோம். இந்த கழுதையை விலைக்கு கேட்டு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் வந்துவிட்டார்கள் ஆனால், நான் தரவில்லை.
என் திப்புவுக்கு(கழுதையை அப்படித்தான் அழைக்கிறார்), நாள்தோறும் 5 கிலோ உளுத்தம் பருப்பை ஊறவைத்து கொடுக்கிறேன். 4 லிட்டர் பால், 20 கிலோ பச்சைப்புல் ஆகியவற்றை உணவாக அளிக்கறேன். அதிலும் உளுந்து பயிர் திப்புக்கு மிகவும் பிடிக்கும். ஏறக்குறைய நாள்தோறும் திப்புவுக்காக ரூ.ஆயிரம் வரை செலவு செய்கிறேன்.
மேலும், மாலையில் திப்புவை அழைத்துக் கொண்டு கண்டிப்பாக நடைபயிற்சிக்கும் செல்வேன். அங்கு சிறிதுநேரம் சுதந்திரமாக நடமாடவிடுவேன். இனப்பெருக்கத்துக்கு திப்புக்கு ஒரு முறைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறேன். இதன் முலம் பிறந்த குட்டிகளையும் நான் ரூ.3 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை விலைக்கு விற்கிறேன். என்னைப் பொருத்தவரை திப்புக்கு விலை மதிப்பே கிடையாது.
என் திப்புவுடன் மற்ற கழுதைகளை இணை சேர்க்க ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வருகிறார்கள்.இதன் மூலம் மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடிகிறது” எனத்தெரிவித்தார்.
