Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி.. ஒரு மணி நேர அறுவை சிகிச்சை.. முதியவர் வயிற்றிலிருந்து 206 சிறுநீரக கற்கள் அகற்றம்..

தெலுங்கானா மாநிலத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 56 வயதான முதியவர் ஒருவர் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் 206     சிறுநீரக கற்களை அகற்றியுள்ளனர். 
 

Doctors remove 206 kidney stones in 1 hour from 56-year-old man in Hyderabad
Author
India, First Published May 20, 2022, 4:08 PM IST

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் வசிக்கும் 56 வயதான ராமலக்ஷ்மையா என்பவரர் கடந்த 6 மாதமாக கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து உள்ளூர் மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகள் சில காலம் மட்டுமே வலியில்லாமல் இருந்துள்ளது. பின்னர் மீண்டும் வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள Aware Gleneagles Glopal மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றின் இடது பக்கத்தில் சிறுநீரக கற்கள் இருப்பது அல்ட்ரா சோனாகிராபிலும் தெரியவந்ததுள்ளது.  பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட சிடி கேன் மூலம் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டு, லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின் , அவரது வயிற்றியிலிருந்து 206 சிறுநீரகக் கற்களை அகற்றியுள்ளனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க: பிரதமருக்கு பாதுகாப்பு இருக்குமா ? பேரறிவாளன் விடுதலை - குண்டை தூக்கி போட்ட தங்கபாலு !

இதுக்குறித்து பேசிய அந்த மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சிறுநீரக மருத்துவர் டாக்டர் பூலா நவீன் குமார், “ முதற்கட்ட சோதனை மற்றும் அல்ட்ராசோனாகோபி சோதனை மூலம் நோயாளியின் இடது சிறுநீரக பகுதியில் கற்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் சிடி ஸ்கேன் மூலம் அது உறுதிசெய்யப்பட்டது.பின்னர் நோயாளிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, லேப்ரோஸ்கோபி அறுவைசிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சைக்கு பின், அவரது வயிற்று பகுதியில் இருந்து 206 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தற்போது நோயாளி நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை முடிந்து 2 வது நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவித்தார்.கோடைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் போதிய அளவு தண்ணீர் குடிக்காததனால் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க: ஏதேதோ பேசும் அண்ணாமலை.. இந்த பிரச்சனை தெரியலயா.. வறுத்தெடுக்கும் கொங்கு ஈஸ்வரன்.

Follow Us:
Download App:
  • android
  • ios