Asianet News TamilAsianet News Tamil

எந்தெந்த நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் தெரியுமா?

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்

Do you know which countries have the highest value of Indian Rupees smp
Author
First Published Sep 25, 2023, 3:54 PM IST

பொதுவாக, சர்வதேச வர்த்தகத்தில் எந்த நாட்டின் நாணயமும் அமெரிக்க டாலர்களில் செலுத்தப்படுகிறது. அமெரிக்க டாலர் மற்ற நாணயங்களை விட சற்று அதிக மதிப்பு வாய்ந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு சுமார் ரூ.80. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கரன்சியும் ரூபாயை விட அதிகமாக உள்ளது. அதனால்தான், அந்த நாடுகளுக்குச் செல்வதற்கோ அல்லது அங்கே குடியேறுவதற்கோ அதிகப் பணம் செலவாகிறது. இருப்பினும், சில நாடுகளில், இந்திய ரூபாயின் மதிப்பு அங்குள்ள நாணயத்தை விட அதிகமாக உள்ளது. அந்த நாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

இந்தோனேசியா


இந்தோனேசியா ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாகும், இது உலகளவில் அதிக எரிமலைகளை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இது பண்டைய இந்து மற்றும் பௌத்த கோவில்கள் இங்கு உள்ளன. தெளிவான நீர் கொண்ட தீவுகளையும், வெப்பமண்டல காலநிலையையும் விரும்புவோருக்கு இந்தோனேஷியா ஏற்ற நாடு. இங்கு 1 இந்திய ரூபாய் = 180 இந்தோனேசிய ரூபாய்க்கு சமம்.

வியட்நாம்


அழகிய தேசமான வியட்நாம் இயற்கை எழில் கொஞ்சும் நாடு. பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை முதல் போர் அருங்காட்சியகங்கள் வரை உலகின் மிகப்பெரிய குகை அமைப்புகள் இங்குள்ளன. இந்திய நாணயத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று. இங்கு 1 இந்திய ரூபாய் = 285 வியட்நாமிய டாங்.

இலங்கை


விடுமுறையை கொண்டாட இலங்கை ஏற்றது. பசுமை, அழகிய கடற்கரைகள், மலைகள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்களையும் நீங்கள் அனுபவிக்க முடியும். இது இந்தியாவிற்கு அருகில் உள்ளதாலும், விமானங்கள் மலிவு விலையில் இருப்பதாலும் மிகவும் பிரபலமான பயணத் தலங்களில் ஒன்றாகும். இங்கு 1 இந்திய ரூபாய் = 3.75 இலங்கை ரூபாய்க்கு சமம்.

நேபாளம்


மலைகளை நேசிக்கும் மக்களுக்கு நேபாளம் சிறந்தது. நீங்கள் இதுவரை கண்டிராத சில அற்புதமான காட்சிகளை நேபாளத்தின் கண்டு ரசிக்கலாம். நேபாளத்திற்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. மேலும் 7 உயரமான மலைகளில் எவரெஸ்ட் சிகரம் உட்பட நாட்டில் ஏராளமான விஷயம் உள்ளது. இங்கு 1 இந்திய ரூபாய் = 1.6 நேபாள ரூபாய்க்கு சமம்.

கம்போடியா


கம்போடியாவில் அங்கோர் வாட் மிகவும் பிரபலமானது. இது ஒரு பெரிய கல் கோயிலாகும். அரண்மனை, நம்பமுடியாத இடிபாடுகள் மற்றும் அருங்காட்சியகங்கள் கம்போடியாவின் முக்கிய ஈர்ப்புகளில் சில. இங்கு 1 இந்திய ரூபாய் = 50 கம்போடிய ரியல்.

ஜப்பான்


தொழில்நுட்பத்தில் நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியிருப்பதைத் தவிர, ஜப்பான் சுற்றுலாவுக்கான இடமாகவும் உள்ளது. அதன் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவை விடுமுறைக்கு ஏற்றதாக உள்ளன. நீங்கள் அதன் இயற்கை அழகு, கோவில்கள் அல்லது வானளாவிய கட்டிடங்களை ரசிக்கலாம். இங்கு 1 இந்திய ரூபாய் = 1.6 ஜப்பானிய யென்

ஹங்கேரி


வெவ்வேறு கலாசாரங்களை அனுபவிக்க விரும்பும் பயணிகளுக்கு ஹங்கேரி சிறந்தது. இந்த நாடு அதன் கட்டிடக்கலை மற்றும் கலாசாரத்திற்கு பெயர் பெற்றது. இது ரோமானிய மற்றும் துருக்கிய தக்கத்தை கொண்டுள்ளது. தலைநகர் புடாபெஸ்ட் காதலுக்கான ஏற்ற இடங்களில் ஒன்றாகும். இங்கு 1 இந்திய ரூபாய் = 4.1 ஹங்கேரிய ஃபோரிண்ட்.

புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம்!

பராகுவே


தென் அமெரிக்க நாடான பராகுவே பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் உங்கள் அடுத்த பயணத்திற்கான சிறந்த இடமாக இருக்கலாம். இயற்கை அழகு மற்றும் நவீன நகரங்களின் அற்புதமான கலவையை பராகுவே கொண்டுள்ளது. கிராமப்புற கைவினைப் பொருட்களையும் சில சிறந்த ஷாப்பிங் மால்களும் உள்ளன. இங்கு 1 இந்திய ரூபாய் = 87 பராகுவே குரானி.

கோஸ்ட்டா ரிகா


கோஸ்டா ரிகா இயற்கை அழகுடன் கடற்கரைகள், வனவிலங்குகள், பெரிய காடுகள் மற்றும் எரிமலைகளுக்கு தாயகமாக உள்ளது. அதன் வெப்பமண்டல காலநிலை மற்ற இடங்களை விட மக்கள் விரும்புவதற்கு மற்றொரு காரணம். இங்கு 1 இந்திய ரூபாய் = 6.5 கோஸ்டாரிகன் காலன்.

மங்கோலியா


நகரங்களின் ஏகபோகத்திலிருந்து விலகிச் செல்ல விரும்பும் மக்களுக்கு மங்கோலியா சரியானது. நாட்டின் பரந்த நிலப்பரப்புகளும் தெளிவான வானமும் வேறு எதிலும் இல்லாத அனுபவத்தை அளிக்கின்றன. மக்களின் நாடோடி வாழ்க்கை, பரந்த இயற்கை அழகுடன் இணைந்து, மங்கோலியாவை ஒரு அற்புதமான இடமாக மாற்றுகிறது. இங்கு 1 இந்திய ரூபாய் = 42 மங்கோலியன் துக்ரிக்.

Follow Us:
Download App:
  • android
  • ios