Do you know the cost for International Yoga Day by central government?

கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச யோகா தினத்துக்காக ரூ. 34.5 கோடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் செலவு செய்ததாக ஆர்.டி.ஐ. மனுமூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேசயோகா தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச யோகாதினத்துக்கு மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு? என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் விளக்கம் கேட்டு இருந்தார்.

இதற்கு மத்திய பொது தகவல் அலுவலர் பானாமலி நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில், “ கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 34.50 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற யோகா முகாமுக்கு 16.40 கோடி ரூபாயும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற முகாமுக்கு 18.10 கோடி ரூபாயும் ஆயுஷ் அமைச்சகம் செலவிட்டுள்ளது. அதேசமயம், 
இந்த ஆண்டுக்கான கணக்கு விபரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.