PM Modi Gifts : ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கு பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
பிரதமர் மோடி மேகாலயா & நாகாலாந்து சால்வையை ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கு வழங்கினார்.
புதிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று (பிப்ரவரி 25) அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மன் ஃபெடரல் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். உக்ரைன் மோதல்கள், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
பிரதமர் மோடி மேகாலயா மற்றும் நாகாலாந்து சால்வையை ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கு வழங்கினார். அவை வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்த பொருட்கள் பாரம்பரியமாக வெவ்வேறு பழங்குடியினர் வசிக்கும் இரு வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் கைவினைத்திறனை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேகாலயா ஸ்டோல்கள் முதலில் காசி மற்றும் ஜெயின்டியா அரச குடும்பத்திற்காக நெய்யப்பட்டவை ஆகும். அவர்கள் தங்கள் சக்தி மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதினர். சம்பிரதாய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது ஸ்டோல்கள் அணியப்படுகின்றன. மேலும் அவற்றின் சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்கள் அரச குடும்பத்தின் செல்வம் மற்றும் கௌரவத்தை பிரதிபலிப்பதாக பழங்குடியின கருதுகின்றனர்.
இந்த ஸ்டோல்களை உருவாக்க சிறந்த திறமை மற்றும் படைப்பாற்றல் தேவைப்படுகிறது. இந்த வகையான ஸ்டோல்கள் உள்நாட்டில் கிடைக்கும் கம்பளி மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. ஸ்டோல்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. உலகெங்கிலும் உள்ள ஜவுளி ஆர்வலர்களால் விரும்பப்படுகின்றன.
இதையும் படிங்க..எடப்பாடி அண்ணே நீங்கதான் பொதுச்செயலாளர்!.. கைவிட்ட பாஜக.. காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - தர்மயுத்தம் 2.0 ரெடி
நாகாலாந்தில் உள்ள பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளாக நெய்யப்பட்ட ஜவுளிக் கலையின் நேர்த்தியான வடிவம் நாகா சால்வைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாகா சால்வையின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று வடிவியல் மற்றும் குறியீட்டு வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதாகும். வடிவமைப்புகள் பழங்குடியினரின் தொன்மங்கள், புனைவுகள் மற்றும் நம்பிக்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளன.
மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய இரு மாநிலங்களுக்கும் பிப்ரவரி 27-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் செழுமையான மற்றும் மாறுபட்ட பாரம்பரியங்களுடன் தொடர்புடைய பொருட்களை பரிசளிப்பதை மோடி ஒரு புள்ளியாகக் கொண்டுள்ளார் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!