Do not pay more rate for medicines - Central Government Announcement
ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வந்தபின், நோயாளிகளின் மருந்துகள் விலை அதிகரித்தாலும், அதிகமான பணம் கொடுக்கத் தேவையில்லை, விலையை குறைக்கும் வகையில், மருந்து விலைக்கட்டுப்பாட்டு ஆணையம் புதிய செயல்திட்டத்தை வகுத்து வருகிறது.
விரைவில் அறிவிப்பு வௌியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டும், சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
மருந்துகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், விலை உயரும் நிலை இருக்கிறது.
இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஜி.எஸ்.டியால் அதிகமான மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் விலை உயர்ந்து விடாமல் இருக்க, தேசிய மருந்துகள் விலை ஆணையம் 78 சதவீத மருந்துகளை பாதிக்கப்படாமல் பட்டியலிட்டது.
அதேசமயம், சில மருந்துகளின் விலை ஜி.எஸ்.டி.யில் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த மருந்துகளை நோயாளிகளிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம். அதிகமான வரியை நோயாளிகள் மீது சுமத்தக்கூடாத வகையில், தேசிய மருந்துகள் ஆணையம் புதிய விலைக்கொள்கை குறித்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் வௌியிடப்படும்.
ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் விலை குறைக்கப்படும். ஏற்கனவே புற்றுநோய்க்கு எதிரான மருந்து, எச்.ஐ.வி., சர்க்ரை நோய், ஆன்ட்டிபயோடிக்ஸ் உள்ளிட்ட 761 மருந்துகள் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
