5g spectrum india: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல்: கொளுத்திப் போட்ட திமுக எம்.பி. அ.ராசா
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகஎம்.பியும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருமான அ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகஎம்.பியும், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சருமான அ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்தமாதம் 26ம் தேதி தொடங்கி 7 நாட்கள் நடந்ததது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், கவுதம் அதானி,வோடபோன்ஐடியா இடையே கடும் போட்டி நிலவியதுஇதனால் முதல்நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் கேட்கப்பட்டது. ஆனால், ஏலம் கேட்கும் தொகை அதன்பின் மிகவும் குறைவாக உயர்ந்தது.
5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: 7 நாட்களில் ரூ.1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக விற்பனை
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில் “ 2ஜி, 3ஜி, 4ஜி ஏலத்தோடு ஒப்பிடுகையில் 5ஜி ஏலம் ரூ.5 லட்சம் கோடிக்கு விற்பனையாகும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ஒட்டுமொத்தமாக ரூ.4.30 லட்சம் கோடிக்கு 72 ஜிகாஹெட்ஸ் அலைவரிசை ஏலம் விடப்பட்டது. ஆனால், உண்மையில் ரூ.4.30 லட்சம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1.50 லட்சம் கோடிதான் கிடைத்தது.
இந்நிலையில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான அ.ராசா இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது “ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், 2ஜி, 3ஜி, 4ஜியில் கிடைத்த தொகையைவிட ரூ.5 லட்சத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் போகும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் 5ஜி அலைக்கற்றி ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போயுள்ளது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2ஜி அலைக்கற்றையோடு ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை 10 முதல் 20 மடங்கு மதிப்பில் உயர்ந்தது, திறன்பெற்றது. அதை எவ்வாறு குறைந்த தொகைக்கு ஏலம் கொடுக்க முடியும்.
பொலிவுபெறும் பிஎஸ்என்எல்: மறுசீரமைக்க ரூ.1.64 லட்சம் கோடி: 4ஜி வருகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நான் டிராய் அமைப்புக்கு 30மெகாஹெட்ச் அலைக்கற்றையை மட்டும்தான் பரிந்துரைசெய்தேன். தற்போது 51ஜிகாஹெட்ஸ் கொண்ட 5ஜி ஸ்பெக்ட்ரம் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். இந்த ஏலத்தில் எவ்வளவு மோசடிகள் நடந்துள்ளது குறத்து மத்தியில் ஆளும் அரசுவிசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அ ராசா தெரிவித்தார்