''சில நேரத்தில்'' காங்கிரஸ் தலைவர் ''அந்த'' முடிவை எடுப்பார்: டி.கே. சிவகுமார் வைத்த மர்மம்!!

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கர்நாடக முதலமைச்சரின் பெயரை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. 

DK Shiva kumar said some time congress president will take decision on rotational CM in Karnataka

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று அல்லது நான்கு முதலமைச்சர்கள் என்ற ஆலோசனையை நிராகரித்த கட்சி தலைமை சித்தராமையாவின் அமைச்சரவையில் ஒரு துணை முதலமைச்சர் என்ற முடிவுக்கு வந்தது. அவர் டி.கே. சிவகுமார். இவர்களுடன் முதல் கட்டமாக 7 அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

டெல்லியில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த அறிவிப்பை வெளியிட்டார். முதல்கட்டமாக 6 அமைச்சர்கள் பதவியேற்க இருப்பதாகத் தெரிகிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உடன் 6 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் டாக்டர்.ஜி.பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல், கே.எச்.முனியப்பா, எச்.கே.பாட்டீல், பி.கே.ஹரிபிரசாத், சதீஷ் ஜாரகிஹோலி, யு.டி.காதர் ஆகியோர் ஆவர்.  

தற்போது கர்நாடகாவில் ஒரு பக்கம் பரபரப்பும் மறுபுறம் கோபமும் வெளிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணம் மூன்று அல்லது நான்கு துணை முதலமைச்சர்கள் முதலில்  கேட்கப்பட்டதாம். தலித், லிங்காயத், சிறுபான்மையினர் உள்ளிட்ட பல சமூகத்தினருக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதாம். இது இல்லை என்று தற்போது முடிவானதால் சிலர் அதிருப்தியில் உள்ளனராம். 

துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு டி.கே. சிவகுமார் போட்ட முதல் ட்வீட் இதுதான்..

DK Shiva kumar said some time congress president will take decision on rotational CM in Karnataka

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணத் தவறினால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு பலத்த இழப்பு ஏற்படலாம் என்று தலைமை ஆலோசித்துள்ளது. மாநிலத்தில் அரசியல் ரீதியாக முக்கியமாக ஒக்கலிக்கர் மத்தியில் டி.கே. சிவகுமாருக்கு செல்வாக்கு இருக்கிறது. அதேசமயம், சித்தராமையாவுக்கு சிறுபான்மையினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், குருபர்கள் ஆகியோரின் ஆதரவு இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தலித்கள் அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து இருந்தனர். இந்த வகையில் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராகி இருக்கிறார். இவர் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில் 2006ஆம் ஆண்டில் இணைந்தவர். ஜேடிஎஸ் கட்சியில் இருந்து இவரை கட்சியின் தலைவர் தேவகவுடா வெளியேற்றி இருந்தார்.

“ தப்பா முடிவு பண்ணாதீங்க” கர்நாடக வெற்றி குறித்து காங்கிரஸை எச்சரித்த பிரசாந்த் கிஷோர்..

ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றி இருந்தாலும், 2013ஆம் ஆண்டில் 122 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் ஆனார். எந்த முதல்வரும் சாதிக்காத வகையில், ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்து இருந்தார். மீண்டும், பாஜக இல்லாத ஆட்சி அமைக்க 2018ஆம் ஆண்டில் முயற்சித்தார். ஜேடிஎஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

தற்போதும் சித்தராமையாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கட்சிக்காக அதிகமாக உழைத்தவர் டி.கே. சிவகுமார் என்று பரவலாக பேசப்பட்டாலும், அவர் மீது இருக்கும் வழக்குகள் கட்சியை மிரட்டி வருகிறது.

DK Shiva kumar said some time congress president will take decision on rotational CM in Karnataka

அதனால் தான் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா, இரண்டரை ஆண்டுகள் டிகே சிவகுமார் என்று கூறப்பட்டது. ஆனால், முதல் இரண்டு ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள மூன்று ஆண்டுகள் டிகே சிவகுமார் முதல்வராக நீடிப்பார் என்ற பேச்சும் முக்கியத்தும் பெறாமல் இல்லை. 

இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அளித்திருந்த பேட்டியில், ''எங்களுக்கு இடையே நடந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக கூற விரும்பவில்லை. சில நேரத்தில் ''அந்த'' முடிவை காங்கிரஸ் தலைவர் எடுப்பார். நிர்வாகம் முக்கியமானது. எந்த முடிவு எடுத்தாலும் காங்கிரஸ் தலைமை தான் எடுக்கிறது'' என்று டிகே சிவகுமார் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இதற்கு இசைவு கொடுத்தவர் யார் சோனியா காந்தியா? என்ற கேள்விக்கு மட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios