சபாநாயகரின் உத்தரவு தவறு என்பதை வெளி உலகுக்கு தெரிவிப்பதற்காகவாவது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’என்று தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். 

மதுரையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், அதே சமயம் எவ்வளவு சீக்கிரமாக தேர்தல் வந்தாலும் அ.ம.ம.க.சார்பில் 18 எம்.எல்.ஏ.க்களும் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றம் செல்வார்கள் என்றும்  தெரிவித்தார்.

 

மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் 30 முதல் 90 நாட்களுக்குள்  மேல்முறையீடு செய்யமுடியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் சம்மதத்துடனேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு எந்தத்தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது என்றார்.