கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் மின்சாரம், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்படைந்துள்ளது. பேரிடர் மீட்பு படையினர் கேரளாவில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தினர் இன்று இடுக்கி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் கழக மருத்துவ அணித் தலைவர்கள் இந்த நிவாரண உதவியை வழங்கியுள்ளனர்.